ஆடி அமாவாசை விரதம்
ஆடி அமாவாசை ஆடி என்பது புனிதமான மாதமாக விளங்குகிறது . இது ஜூலை மத்தியிலிருந்து ஆகஸ்டு மத்திய காலம் வரையிலான காலமாகும் . கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகத் திகழும் இந்த மாதத்தில் மக்கள் , குறிப்பாக , அம்மன் எனப்படும் பெண் தெய்வங்களை சிறப்பாக வழிபடுகிறார்கள் . ஆடி அமாவாசை என்பது , இந்த மாதத்தில் வரும் மிகப் புனிதமான நாளாகும் . அமாவாசை திதி அதாவது அமாவாசை என்பது , முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும் . இந்த நாள் மாதம் ஒருமுறை வந்தாலும் , ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை , பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச் சிறப்பானதாகக் கொண்டாடப்படுகிறது . இந்த நாளில் இவர்கள் குறித்து நாம் செய்யும் தர்ப்பணம் போன்ற சடங்குகள் இவர்களைச் சென்றடைந்து , திருப்திப்படுத்தி , மகிழ்வித்து , முன்னோர்களின் நல்லாசிகளை நமக்குப் பெற்றுத் தரும் என்று பல புனித நூல்கள் கூறுகின்றன . இந்த ஆசிகள் நமக்கு பல நன்மைகளைத் தந்து , வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லவை ஆகும் . ஆடி அமாவாசையில் அனுசரிக்க வேண்டிய வழிபாடு , விரதம் போன்றவை குறித்தும் , அவற்றின் வழிமுறை பற்றியும...